சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகரின் மையப் பகுதியில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில், அடிக்கடி அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சென்னையின் முக்கிய சாலையில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையும் படிக்க : சென்னை ஏசி பேருந்துகளில் பயணிக்க ரூ. 2,000 பாஸ் அறிமுகம்!
இதனிடையே, வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலப் பணிகளும் தொடங்க இருப்பதால், அப்பகுதியில் வரும் காலங்களில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கு மாற்று இடமாக சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல் ஆணையரின் உத்தரவை வரவேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

15.4.1976: வள்ளுவர் கோட்டம்: இன்று ராஷ்டிரபதி திறந்து வைக்கிறார்

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!

உலக அமைதிக்காகப் போராட அனுமதி கோரியவருக்கு ரூ. 50,000 அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


