காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தங்கம் விலை தொடர்ந்து குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை இன்றைய நிலவரம்.

News image

தங்கம் விலை (கோப்புப்படம்)

din

Updated On :25 மார்ச் 2025, 4:24 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 65,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த மாா்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 21-இல் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 66,160-க்கு விற்பனையான நிலையில், தொடர்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 8,230-க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 65,840-க்கும் விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 8,215-க்கும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 65,720-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தொடர்ந்து 5-வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 65,480-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து 8,185-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.110-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.