நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நடிகர் மனோஜ் உடல் தகனம்

மகள்கள் இறுதிச்சடங்குகளைச் செய்த பிறகு பெசன்ட் நகர் மின்மயானத்தில் மனோஜ் உடல் தகனம் செய்யப்பட்டது.

News image

மனோஜ் பாரதிராஜாவுக்கு இறுதிச் சடங்கு செய்த மகள்

Updated On :26 மார்ச் 2025, 5:46 pm IST

மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது.

சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மனோஜின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

மின்மயானத்தில் அவரின் இரு மகள்கள் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மகனின் பிரிவால் மனமுடைந்து வாடிய பாரதிராஜாவை அவரின் உறவினர்கள் கைத்தாங்கலாக அழைத்துவந்தனர்.

இறுதிச்சடங்கில் பாக்கியராஜ், வைரமுத்து, சீமான், இளவரசு, தயாரிப்பாளர் சிவா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், கடந்த சில நாள்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சேத்துப்பட்டிலுள்ள இல்லத்தில் மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25) காலமானார்.

அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

சேத்துப்பட்டில் உள்ள அவரின் இல்லத்தில் உயிர் பிரிந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக மனோஜ் உடல் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் பாக்கியராஜ், வெற்றிமாறன், ராம், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.