அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்கள்: முதல்வர் வெளியிட்டார்!

கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்களை வெளியிட்ட முதல்வர்.

News image
கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்களை வெளியிட்ட முதல்வர்.
Updated On :27 மார்ச் 2025, 11:32 am

DIN

பொதுப்பணித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள
கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 27) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 8 தொகுதிகள் கொண்ட கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்களை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் கட்டுமானம் மற்றும் பொறியியல் பணிகள் பல்வேறு துறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அத்துறைக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள ஏதுவாக துறைவாரியாக தரவு விவரப் புத்தகங்கள் தனித்தனியாக பயன்பாட்டில் உள்ளது.  

1984-ஆம் ஆண்டு பொதுப்பணித் துறைக்கென கட்டுமானப் பணிக்களுக்கான தரவு விவரப் புத்தகம் திருத்தியமைக்கப்பட்டு, இன்று வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனவே, இதை உணர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு அனைத்து பொறியியல் துறைகளும் உபயோகிக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த கட்டுமானப் பணிக்களுக்கான தரவு விவரப் புத்தகம் தயாரிக்க, பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), தலைமையில் அனைத்து பொறியியல் துறைகளின் தலைமைப் பொறியாளர்கள் உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

காலப்போக்கில் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கட்டுமானங்கள், நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் நவீன கட்டுமான முறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களை கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரங்களின் மூலம் மதிப்பீட்டுத் தொகையினை ஒரே மாதிரியாக அனைத்து பொறியியல் கட்டுமானத் துறைகளிலும் மேற்கொள்ளும் வகையில், இக்குழு பலமுறை கூடி விரிவான விவாதங்களுக்குப் பிறகு, தொகுதி – 1 பொதுப்பணித்துறை, தொகுதி-2 பொதுப்பணித் துறை மற்றும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை, தொகுதி-3 நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொகுதி 4, 5, 6, 7 & 8 - சென்னை பெருநகர குடிநீர்  மற்றும்  கழிவுநீர் வாரியம் ஆகிய 8 தொகுதிகள் கொண்ட கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கட்டுமானப் பொறியியல் துறைகள் அனைத்தும், எளிதான முறையில் மதிப்பீடு தயாரிக்க பெரிதும் பயன்படும்.

பொதுப்பணித் துறைக்கான கட்டுமானப் பணிக்களுக்கான இப்புதிய தரவு விவரப்  புத்தகங்கள்,  40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சியை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இத்தரவு விவரப் புத்தகங்களின் வாயிலாக அனைத்துவிதமான கட்டுமானப் பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருள்கள், வேலையாள்கள், இயந்திரங்கள் போன்றவற்றின் விரிவான விவரங்களை அறிந்து கொள்ள இயலும். 

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர்
எ.வ. வேலு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.