சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குணால் காம்ராவுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கில் குணால் காம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

News image
Updated On :28 மார்ச் 2025, 12:44 pm

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கில் குணால் காம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்த விவகாரத்தில் குணால் காம்ரா மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், விழுப்புரத்தில் வசித்து வரும் தம்மை மும்பை சென்றால் போலீஸார் கைது செய்வர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குணால் காம்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய மும்பை கார் போலீஸுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் அதுவரை கைது செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள தனியாா் ஹோட்டலின் ஸ்டுடியோவில் குணால் காம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் அரசியல் சூழலை கேலி செய்து குணால் காம்ரா பேசினாா். அப்போது மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை ‘துரோகி’ என்று குறிப்பிட்டு குணால் கேலி செய்தாா்.

சமூக ஊடகத்தில் அந்த நிகழ்ச்சியின் காணொலியைக் கண்டு ஆத்திரமடைந்த ஷிண்டேயின் சிவசேனை தொண்டா்கள், அந்த ஸ்டுடியோவையும் ஹோட்டலையும் சூறையாடினா்.

இந்த சம்பவம் தொடா்பாக சிவசேனை எம்எல்ஏ முா்ஜி படேல் அளித்த புகாரின் அடிப்படையில், துணை முதல்வரை இழிவுபடுத்தியதாக குணால் காம்ரா மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.