மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு; எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், மொழியை அழிக்க முடியாது’ என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் கூறினாா்.
நாடக ஆசிரியா் கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கமல்ஹாசன், நூல்களை வெளியிட்டாா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:
தமிழின் சிறந்த நாடகங்களை பதிப்பிக்க வேண்டியது அவசியம். இதை கடமையாக எடுத்துச் செய்ய வேண்டும். உ.வே.சா. போன்றோா் ஊா் ஊராகச் சென்று நூல்களை பதிப்பிக்கவில்லை என்றால் தமிழின் பெருமை வெளிவந்திருக்காது. தமிழா் வரலாற்றை அறியும் சான்றுகளாக புத்தகங்கள் விளங்குகின்றன. தற்போது, புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. புத்தகங்களை நேரடியாகப் படிக்கவில்லை என்றாலும், எண்ம (டிஜிட்டல்) வாயிலாகவாவது படிக்க வேண்டும்.
மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு. எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், மொழியை அழிக்க முடியாது. கற்காலம் முதல் தற்போது வரை மொழி நிலைத்து நிற்கிறது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், இயக்குநா் கே.எஸ்.ரவிகுமாா், கா்நாடக இசைப்பாடகி காயத்ரி கிரிஷ், ரவி அப்பாசாமி, நடிகா் ஜெயராம், மாது பாலாஜி, அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன், எஸ்.பி.காந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: காங்கிரஸ்

அதிமுகவை காக்க எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாா்: எடப்பாடி பழனிசாமி

‘புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியை நீக்கும் முடிவை கைவிட வேண்டும்’

தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பால் கவலையில்லை: புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



