25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மே 5 வணிகர் நாளாக அறிவிக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின்

Published On :5 மே 2025, 8:37 pm IST

தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வணிகர் சங்க கோரிக்கை மாநாடு மதுராந்தகத்தில் இன்று (மே 5) நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது,

''தமிழக மக்களுக்கும் வணிகர்களுக்கும் வணிகர் நாள் வாழ்த்துகள். மே 5ஆம் தேதியை வணிகர் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிடப்படும்.

வணிகர்களின் நலனைக் காக்கும் அரசாக திமுக இருக்கும்.

நாட்டில் முதல்முறையாக 1989ஆம் ஆண்டு வணிகர் நல வாரியம் அமைத்தது தமிழ்நாட்டில்தான்.

வணிகர் நல வாரியத்தை சீரமைத்து உறுப்பினர் எண்ணிக்கையை செம்மைப்படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அதனைச் செய்துள்ளோம்.

வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினர்களுக்கான உதவித்தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கை கால நிர்ணயம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.

சென்னை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் கடைகள் அமைக்க வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இதேபோன்று பேரூராட்சி, ஊராட்சிகளுக்கும் குழு அமைக்கப்படும்.

9 சதுர மிட்டருக்கு மிகாமல் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.

வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்குவதற்கான அனுமதி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

தொழில் துறையில் தமிழ்நாடு முதலிடமாக உள்ளாது; மக்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தியுள்ளோம்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை அமைதி மாநிலமாக மாற்றியிருக்கிறோம்'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.