கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதுகிறார்கள்: சீமான்

வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதுகிறார்கள் என்று சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
சீமான்.
Updated On :5 மே 2025, 7:44 am

DIN

வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதுகிறார்கள் என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தாம்பரத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் பெறப்பட்ட கையெழுத்துகள் எங்கே கொடுக்கப்பட்டன?.

சிற்றூரில் இருக்கும் மாணவருக்கு மருத்துவக் கனவு வரக்கூடாது என்பதற்காகவே நீட் தேர்வு. நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி என்ற பெயரில் பல ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள்.

வட மாநிலங்களில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதுகிறார்கள்.

என்னிடம் ஆதாரம் உள்ளது. மூக்குத்து, தோடு ஆகியவற்றில் பிட் எடுத்துச் சென்று நீட் தேர்வெழுத முடியுமா என்ன?. மூக்குத்தியில் பிட் வைக்கலாம் எனில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாதா?.

நீட் தேர்வு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறோம். அதற்கு யாரிடத்திலும் பதில் இல்லை. நீட் தேர்வை தனியார் நிறுவனம் நடத்துகிறது. நீட் தேர்வு எழுதினாலே தரமான மருத்துவராக வர முடியுமா என்ன?.

மற்ற மாநிலங்களில் இல்லாத கெடுபிடிகள் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் ஏன் இத்தகைய கெடுபிடிகள் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.