மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழகத்தில் எங்கெல்லாம் போர் ஒத்திகை? தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!

தமிழகத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுவது பற்றி...

News image

தமிழக அரசு

Updated On :6 மே 2025, 6:02 am

நாடு முழுவதும் நாளை போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நடத்துமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்தல் போன்றவை ஒத்திகை செய்யவுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை கல்பாக்கம் அணு மின் நிலையம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை, மணலி பெட்ரோலிய தொழிற்சாலைகளில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போர் பாதுகாப்பு ஒத்திகைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.