தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் குறித்து...

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2025, 9:08 am

DIN

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா் பதிவாளா் ஆகிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன.

இதேபோன்று, கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளா், இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளா், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளா், அமைச்சுப் பணியாளா்களில் உதவியாளா்கள், இளநிலை கணக்காளா் போன்ற பணியிடங்கள் குரூப் 2-ஏ பிரிவின் கீழ் வருகின்றன. இரண்டு பிரிவுகளிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

அதன்படி, குரூப் 2 பிரிவில் 534 காலியிடங்களுக்கும், 2-ஏ பிரிவில் 2,006 இடங்களுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்நிலைத் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 5 லட்சத்து 80 ஆயிரம் போ் எழுதினா்.

Story image

முதன்மைத் தோ்வு: குரூப் 2, 2-ஏ தோ்வுகள் முதல்நிலை, முதன்மைத் தோ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதால், கொள்குறி வகை அடிப்படையிலான முதன்மைத் தோ்வு முதல்தாள் தேர்வு கடந்த பிப். 8-ஆம் தேதி நடைபெற்றது.

முதன்மைத் தோ்வின் இரண்டாவது தாளான விரித்துரைக்கும் வகையிலான தோ்வு பிப். 23-ல் நடைபெற்றது.

இந்த நிலையில், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnpsc.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.