லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றங்கள் அதிகரித்துள்ளன: நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

News image
நயினார் நாகேந்திரன்
Updated On :15 மே 2025, 10:22 am

DIN

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருச்சி வருகை தந்த மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தினந்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொலை, கொள்ளை, மது பழக்கம், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு அடிப்படை காரணம் மது பழக்கம்தான். தமிழ்நாடு அரசு குற்றச் சம்பவங்களை தடுக்க எந்த கவனத்தையும் செலுத்தவில்லை.

கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது எண்ணம்" எனத் தெரிவித்தார்.

மேலும் "சென்னையில் நடைபெற்ற பேரணியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருச்சியில் இன்று நடைபெறும் பேரணியில், கட்சிப் பாகுபாடு இன்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். பாஜக கொடி எங்கேயும் கட்ட மாட்டோம். தேசியக் கொடியேந்தி ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் அமைதியான முறையில் பேரணி நடைபெறும்.

தேர்தல் வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து பேசுவோம்.

மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் பதவி கொடுப்பார்கள்" என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.