சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

10-ம் வகுப்பு முடிவுகள்: தஞ்சாவூர் 12-வது இடம்! 95.57% தேர்ச்சி!

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தஞ்சாவூர் மாவட்ட தேர்ச்சி விகிதம் பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :16 மே 2025, 11:46 am IST

தஞ்சாவூர்: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 95.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 12-வது இடத்தைப் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 27 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 95.57 சதவீதம். இது கடந்த ஆண்டை விட 2.17 சதவீதம் கூடுதல். இதன் மூலம், மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 15-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 13-வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

மாவட்டத்தில் தேர்வு எழுதிய 14 ஆயிரத்து 415 மாணவர்களில் 13 ஆயிரத்து 500 பேரும், 14 ஆயிரத்து 860 மாணவிகளில் 14 ஆயிரத்து 478 பேரும் தேர்ச்சி பெற்றனர். அதாவது, மாணவர்களில் 93.65 சதவீதம் பேரும், மாணவிகளில் 97.43 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசுப் பள்ளி அளவில் மாவட்டத்தில் 228 பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 94.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம், அரசு பள்ளிகளிலும் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 12-வது இடத்தைப் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் 88 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 163 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.