

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.
காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு, வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 3,306கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, இன்று (சனிக்கிழமை) காலை வினாடிக்கு 3,479 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் திறப்பைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.
நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை 108.18அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 108. 31 அடியாக சற்று உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 76.03 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.