நீதிமன்ற அவமதிப்பு: கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

பட்டா அவணம் தொடர்பாக 2023ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதைக் காரணம் காட்டி, கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாட்டீலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை குறித்த காலத்தில் அமல்படுத்தாதைச் சுட்டிக்காட்டி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முன்னாள் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாட்டீல் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளாவுக்கும் கோட்டாட்சியர் கோவிந்தனுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மூவரின் அபராதத்தை அவர்களது சொந்த ஊதியத்திலிருந்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில், கோவை வடக்கு வட்டாட்சியர் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை பிறப்பித்து நீதிபதி வேல்முருகன் உத்தர்விட்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்த ஜான் சாண்டி (74) என்பவரது நிலத்தின் பட்டா ஆவணத்தில் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட 2 பேரை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை உரிய காலத்தில் நிறைவேற்றாதது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் 3 வட்டாட்சியர்களுக்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலருக்கும் 1 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ராமன், மதுரைக்கரை வட்டாட்சியர் சத்யனுக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், கோவை ஆதிதிராவிடர் நல சிறப்பு வட்டாட்சியர் ஸ்ரீமலதிக்கும், வெள்ளலூர் கிராம நிர்வாக அலுவலருக்கும் தலா ஒரு மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 1 மாதம் நிறுத்தி வைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com