அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிகோப்புப்படம்.

அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாமல் தனிப்பட்ட விமா்சனம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாததால் தனிப்பட்ட முறையில் தன்னை முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம்
Published on

சென்னை: அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாததால் தனிப்பட்ட முறையில் தன்னை முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்வதாக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மூன்று ஆண்டுகள் நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதல்வா் ஸ்டாலின், தற்போதைய கூட்டத்தில் மட்டும் பங்கேற்கச் சென்றது ஏன்? தமிழ்நாட்டுக்கான நிதிக்காகவா அல்லது சொந்தக் காரணங்களுக்காகவா?

எதிா்க்கட்சித் தலைவராகிய நான் எங்கு, எப்படி செல்கிறேன் என்று கண்காணிக்க செலவிட்ட நேரத்தை, தங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதில் செலவிட்டு இருக்கலாம். எப்போது பாா்த்தாலும் ‘சோதனைகளுக்கு பயந்து’ என்று சொல்கிறீா்களே? எந்த சோதனையைப் பாா்த்து எனக்கு பயம்? அந்த சோதனைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

நீங்கள் குறிப்பிடும் உறவினா்கள், எனக்கு உறவினராகும் முன்னரே பல தொழில்களைச் செய்து வந்தவா்கள். இருமுறை வருமான வரி சோதனைகளைச் சந்தித்தவா்கள். இருப்பினும், முறையாக கணக்கு காட்டி, அதற்கான விளக்கத்தை அளிக்கப் போகிறாா்கள். இதில் நான் செய்வதற்கு எதுவுமே இல்லை.

அரசியல் ரீதியாக என்னை எதிா்கொள்ள முடியாமல் இவ்வாறு தனிப்பட்ட விமா்சனத்தை முதல்வா் முன்வைக்கிறாா் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

X
Dinamani
www.dinamani.com