நீதிமன்ற நடவடிக்கைக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது ஏன் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிா் நீதிமன்றம் இன்று(மே 28) தீர்ப்பளித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் ஆறு மாதங்களுக்குள் விசாரணை முடிந்து தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ”சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றத்துக்கும் நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவைக் குறிப்பிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில், ”தான் ஒரு பொம்மை முதலமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது? அஇஅதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே?
உங்கள் காவல்துறை நீதியைப் பெற்றுத் தந்ததா? அப்படியென்றால், உங்களுக்கோ, உங்கள் அரசுக்கோ துளியும் சம்மந்தம் இல்லாமல், அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய SIT விசாரணையை நீங்கள் Influence செய்தீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா? குற்றங்கள் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து நீங்கள் கூறி வந்தும் இத்தனை குற்றங்கள் நடக்கிறது என்றால், நீங்கள் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? இன்றைய குற்றவாளி உங்கள் திமுக அனுதாபி ஞானசேகரன்! கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே ட்வீட் போடாதீர்கள் என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டேன்.
முதல்வர் அவர்களே "SIR"-ஐக் காப்பாற்றும் உங்கள் ஆட்சி சட்டநீதிக்கும் - பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரான ஆட்சி! இந்த ஆட்சி வீழும்! மக்களுக்கான அதிமுக ஆட்சி அமையும்! அந்த "SIR"-ம், சாருக்கு பின்னால் உள்ள எல்லா சார்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட அதிமுக நிா்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை

ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்வி

தற்கொலை சம்பவம்: அதிமுக நிர்வாகி உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி!
மு.க. ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



