பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா்.
Published on

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா்.

கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா் ராஜகோபாலன். பிரதமரின் செயல்பாடுகளால் ஈா்க்கப்பட்ட அவா் தன்னை பாஜகவில் இணைத்து பணியாற்ற முடிவு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அக்கட்சியின் தமிழக தலைமையகமான கமலாலயத்தில் சனிக்கிழமை மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் ராஜகோபாலன் பாஜகவில் இணைத்துக் கொண்டாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com