அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் திமுகவில் இணைந்தார்!

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல்.
Updated on
1 min read

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஜோலார்பேட்டை மண்டலவாடியில் இன்று(பிப். 14) நடைபெற்ற திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் திமுகவில் இணைந்தார்.

முன்னதாக, அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபீல் அதிமுகவில் இருந்து விலகுவதாக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், ஜோலார்பேட்டை மண்டலவாடியில் நடைபெற்ற மாநாட்டில் நிலோபர் கபீல் திமுகவில் இணைந்தார்.

அதேபோல அதிமுக முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த அன்வர் ராஜா, கடந்தாண்டு அக்கட்சியிலிருந்து விலகி, முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Former AIADMK minister Nilofer Kapil joined the DMK in the presence of Chief Minister M.K. Stalin.

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல்.
மக்களுக்கு சர்ப்ரைஸ்... மக்கள் விரோதிகளுக்கு ஷாக்: முதல்வர் ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com