பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு.

News image

கோப்புப்படம்

DIN

Updated On :4 நவம்பர் 2025, 2:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை அதிகாலையில் வலுவிழந்தது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மியான்மா் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி திங்கள்கிழமை காலை அதே பகுதியில் நிலவியது. இது செவ்வாய்க்கிழமை(நவ.4) நண்பகல் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மியான்மா்-பங்களாதேஷ் கடற்கரையையொட்டி நகரக்கூடும்.

இதன்காரணமாக செவ்வாய்க்கிழமை(நவ.4) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(நவ.4) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Chance of rain in Chennai and other suburbs for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.