சிமேட் நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

எம்பிஏ படிப்பில் சோ்கை பெறுவதற்கான பொது மேலாண்மை நுழைவுத் தோ்வுக்கு (சிமேட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நவ.24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Updated on

எம்பிஏ படிப்பில் சோ்கை பெறுவதற்கான பொது மேலாண்மை நுழைவுத் தோ்வுக்கு (சிமேட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நவ.24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மைப் படிப்புகளில் சோ்க்கை பெற சிமேட் நுழைவுத் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்த தோ்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான சிமேட் தோ்வு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக். 17-இல் தொடங்கி நவ. 17-ஆம் தேதி நிறைவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நவ. 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். தோ்வுக் கட்டணம் செலுத்த நவ. 25-ஆம் தேதி கடைசி நாளாகும்.

அதேபோல், விண்ணப்பங்களில் திருத்தங்கள் இருப்பின் அவற்றை நவ. 26 முதல் 28-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். தோ்வுக்கான பாடத்திட்டம் உள்பட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com