கடந்த 6 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 130 மி.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மைய தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டிட்வா புயலால் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை கடலோர மாவட்டங்களில் மிக தீவிரமாக இருந்தது. நாகை கோடியக்கரையில் 250 மி.மீ. என அதி கனமழை பதிவாகியுள்ளது.
அக்.1 முதல் நவ.29 வரை இயல்பான மழை அளவு 35%, பதிவான மழையின் அளவு 38%, கூடுதலாக 3% பெய்துள்ளது. கடந்த 6 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 130 மி.மீ., நாகையில் 110 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
டிச.1 முதல் மழை படிப்படியாக குறையும், திருவள்ளூரில் மட்டும் அன்று கனமழை பெய்யும். புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் 70-80 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். நாளை வடதமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, புறகர்ப் பகுதிகளில் இன்றும், நாளையும் விட்டு விட்டு கன மழை பெய்யும். எதிர்பார்க்கும் நேரத்தில் புயலின் நகர்வு இருக்காது.
நாளை மாலை முதல் புயல் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. கடலோரப் பகுதிகளில் டிட்வா புயல் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. கரையைக் கடக்காது என இதுவரை கணிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 60 கி.மீ., நாளை மாலை 5.30 மணிக்கு பிறகு 25 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கும் என்றார்.
வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் சென்னையை நெருங்கும்போது புயலாகவே வரும் என கணிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் சென்னையை நெருங்கும்போது தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என முன்பு கூறப்பட்டிருந்தது.
நாளை மாலை 6 மணிக்கு டிட்வா புயல் சென்னைக்கு அருகே புயலாகவே தென்மேற்கு வங்கக்கடலை அடைகிறது.
Summary
Karaikal received a maximum of 130 mm of rain in the last 6 hours.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் மிதமான மழை

அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைகிறது காற்றழுத்தத் தாழ்வு!
தமிழ்நாட்டில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே?

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப். 28 வரை மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



