
நாமக்கல் கிட்னி முறைகேடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பேரவைக்கு வருகை தந்தனர்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை கூடிய நிலையில், நேற்று கரூர் கூட்டநெரிசல் விவகாரம் குறித்து முதல்வரின் விளக்கத்தை தொடர்ந்து விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் கூட்டநெரிசல் ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் காரசார விவாதம் மேற்கொண்ட நிலையில், அமைச்சர் சிவசங்கரின் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், நாமக்கல் கிட்னி முறைகேடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பேரவைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இதனிடையே, பாமக பேரவைக் குழுத் தலைவராக உள்ள ஜி.கே. மணியை நீக்கக் கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.