/

பகல் 1 மணி வரை சென்னை, 23 மாவட்டங்களில் மழை நீடிக்கும்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

News image
மழை (கோப்புப்படம்)- DIN
Updated On :20 அக்டோபர் 2025, 5:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 21-ஆம் தேதி வாக்கில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் திங்கள்கிழமை (அக். 20) பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு(பகல் 1 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் அரியலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Chennai Meteorological Department has reported that there is a possibility of rain in 24 districts, including Chennai, for the next 3 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.