விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக....

News image
மேட்டூர் அணை.
Updated On :21 அக்டோபர் 2025, 3:38 am

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(அக். 21) காலை 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 30,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,300 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 7,700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

மேட்டூர் அணை வரலாறில் ஒரே ஆண்டில் அணையின் நீர்மட்டம் ஏழாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை நேற்று(அக். 20) எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The amount of water entering the Mettur Dam has increased to 30,500 cubic feet per second as of 8 am today (Oct. 21).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.