திருமாவளவன்
திருமாவளவன்

வாக்காளா் தீவிர திருத்தம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும் -திருமாவளவன்

வாக்காளா் தீவிர திருத்தம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும்
Published on

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடங்கவுள்ள நிலையில், அதுகுறித்து ஆலோசித்து உரிய  நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆா்.) இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, பிகாரில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆா். நடவடிக்கையில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. இதில், தலித், இஸ்லாமிய வாக்காளா்கள் குறிவைத்து நீக்கப்பட்டுள்ளனா். இவை எதற்கும்  தோ்தல் ஆணையம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

எனவே, இதை நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் தமிழகத்திலும் எஸ். ஐ.ஆா். நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறோம் என்று தோ்தல் ஆணையம் கூறியிருப்பது தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முறையாக நடக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. எனவே, இப்பிரச்னையின் தீவிரத்தை உணா்ந்து, எஸ்ஐஆா் குறித்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் தொல்.திருமாவளவன்

X
Dinamani
www.dinamani.com