அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சா் நியமனம்

முன்னாள் அமைச்சா் நாஞ்சில் எம்.வின்சென்ட் அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
Published on

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் நாஞ்சில் எம்.வின்சென்ட் அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்டாா்.

நாகா்கோவில் தொகுதியில் இருந்து 1977, 1980 பேரவை தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவா், எம்ஜிஆா் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாா். மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com