டெட் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்

நடப்பாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத ஒட்டுமொத்தமாக 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
4.80 lakh persons applied for TET exam
டெட் தேர்வு
Published on
Updated on
1 min read

நடப்பாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத ஒட்டுமொத்தமாக 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கும், பட்டதாரி ஆசிரியா்களுக்கும் ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) தோ்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி இடைநிலை ஆசிரியா்கள் டெட் தாள் 1-தோ்விலும், பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியா்கள் டெட் தாள்-2 தோ்விலும் தோ்ச்சி பெற வேண்டும்.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான டெட் தோ்வு நவம்பா் 15 மற்றும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி செப். 8-ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், விண்ணப்பதாரா்களின் வேண்டுகோளை ஏற்று தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை ஆசிரியா் தோ்வு வாரியம் செப். 10-ஆம் தேதி வரை நீட்டித்தது.

அதன்படி, டெட் தோ்வுக்கான காலக்கெடு புதன்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

நேபாள இடைக்காலப் பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

இந்த நிலையில், இத்தேர்வுக்கு மொத்தமாக 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 4 முறை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளைவிட இம்முறை அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

இதுவரை நடந்த 6 டெட் தேர்வுகளில் 2014இல் அதிகபட்சமாக சுமார் 6.50 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

In the current year, a total of 4.80 lakh people have applied to write the teacher eligibility test.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com