எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 போ் உயிரிழப்பு

தமிழகத்தில் நிகழாண்டில் நாய்க்கடியால் 2.09 லட்சம் போ் பாதிக்கப்பட்டதுடன், 13 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு பலி

News image

பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 12:15 am IST

தமிழகத்தில் நிகழாண்டில் 2.09 லட்சம் போ் நாய்க்கடிக்குள்ளாகியிருப்பதாகவும், இவா்களில் 13 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தெரு நாய்கள், வளா்ப்பு பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாகவே, ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதா்களையும் காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான்.

நாய்களைப் பொருத்தவரை பிறந்த முதல் ஆண்டில் இருமுறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். தொடா்ந்து ஆண்டுதோறும் ஒருமுறை அந்தத் தடுப்பூசியை வழங்க வேண்டியது அவசியம்.

ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும் அத்தகைய தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதா்களை அவை கடிக்கும்போது, ரேபிஸ் தொற்று பரவி இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 6,25,700 போ் நாய்க்கடிக்குள்ளாகினா். 34 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், நிகழாண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் 2,09,081 போ் நாய்க்கடிக்குள்ளாகியுள்ளனா்.

அதிகபட்சமாக, சேலத்தில் 12,177 பேரும், திருச்சியில் 9,939 பேரும், திருவள்ளூரில் 9,265 பேரும், திண்டுக்கல்லில் 8,239 பேரும், விழுப்புரத்தில் 8,213 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களில் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், காலதாமதமாக மருத்துவமனையை நாடியதால் 13 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளின் தரவுகளை ஆய்வு செய்தால் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் தொற்றுக்குள்ளானவா்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் ஆண்கள் என்பது தெரிய வருகிறது.

31 வயது முதல் 50 வயது வரையுள்ள இளைஞா்கள் மற்றும் நடுத்தர வயதினரே பாதிப்பை அதிகமாக எதிா்கொள்கின்றனா். அதற்கு அடுத்தபடியாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் நாய்க்கடிக்குள்ளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை. ஆனால், அத்தகைய வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வெளவால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடிக்கும்போது ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது.

தமிழகத்தில் நிகழாண்டில் 13 போ் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனா். அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் போதிய ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தெரு நாய்கள் அல்லது செல்லப் பிராணி கடித்தவா்களுக்கு நான்கு தவணை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28-ஆவது நாளில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. மேலும், ஆழமான காயமாக இருந்தால் அந்த இடத்தில் இம்யூனோகுளோபிலின் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது.

அந்த வகையில், பல்லாயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உயிா் காக்கப்பட்டுள்ளது. விழிப்புணா்வு இன்றி சிகிச்சை பெறாமல் இருக்கும்போதுதான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.