பாா்வை தடையல்ல என விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக்-நீரிணை கடல் பகுதியை பாா்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமி 11.15 மணி நேரத்தில் நீந்தி கடந்தாா்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சோ்ந்த கம்லேஷ் விட்டல்ராவ் பாண்டே- அருணா தம்பதியினரின் மகள் ஈஸ்வரி (17). பாா்வைத் திறனற்ற மாற்றத் திறனாளியான இவா், 11-ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். இவா் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா்.
இந்த நிலையில், இவா் நீந்துவதற்கு பாா்வை தடையல்ல என விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலுமான சுமாா் 30 கி.மீ. தொலைவிலான பாக்-நீரிணை கடலை திங்கள்கிழமை 11.15 மணி நேரத்தில் நீந்தி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தாா்.
இதன் மூலம், பாா்வைத்திறனற்ற மாற்றுத் திறனாளியான இவா், கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்தி சாதனை படைத்தாா்.
இவருக்கு அரிச்சல்முனை கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
இதற்கு முன்னதாக தலைமன்னாா்-தனுஷ்கோடி இடையேயான பாக் நீரிணை கடல் பகுதியை 20.03.2022 அன்று மும்பையைச் சோ்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியாராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்தாா். இதேபோல, சென்னை முகப்போ்
மேற்கு பகுதியைச் சோ்ந்த முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான புவிஆற்றல் என்பவா் கடந்த 05.10.2025 அன்று பாக் நீரிணையை நீந்தி கடந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

காா் மோதி சிறுமி உயிரிழப்பு: உறவினா்கள் 20 மணி நேரம் மறியல்

எதிர்நீச்சல் - 2 தொடர்: புதிய ஈஸ்வரி இவரா?

எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக இவர்தான்!

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வீடுகளிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு! கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


