11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

திருக்கனூர் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மோதல்: காவல் துறை தடியடி!

காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால் காவல் துறையினர் தடியடி நடத்தியது குறித்து...

News image

பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறை - DIN

Updated On :9 ஏப்ரல் 2026, 6:18 am

திருக்கனூர் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே மோதல்போக்கு ஏற்பட்டதால், காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் - பாஜனதா வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் போட்டியிடுகிறார். திருக்கனூர் அரசு உயர்நிலை பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

இங்கு பாஜனதாவினர் அதிகளவில் திரண்டு இருந்தனர். இதனால் அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர், எதற்காக நீங்கள் இங்கு திரண்டு இருக்கிறீர்கள். வாக்காளர் மட்டும் தான் இருக்க வேண்டும்; மற்றவர் இருக்கக்கூடாது என்று பாஜனதாவினரிடம் தெரிவித்தனர்.

இதனால், இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் மோதலாக மாறி இருதரப்பினரும் ஒருவொரையொருவர் தாக்கத் தொடங்கினார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருக்கனூர் போலீசார் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி விரட்டி கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Summary

Puducherry election 2026 Clash Between BJP and Congress Cadres at Police Resort to Lathi-charge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.