கடலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தால் துணை முதல்வர் உதயநிதியின் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தவெக தலைவர் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய அனுமதி கோரியிருந்த நிலையில் புதுவையில் தேர்தல் நடைபெற்றதையொட்டி அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து விஜய் நாளை(ஏப். 11) கடலூர் மாவட்டத்திற்குச் செல்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும் விஜய், வடலூர், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய பகுதிகளுக்குச் செல்கிறார். நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அங்கு பிரசாரம் செய்கிறார்.
அதேநேரத்தில் கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, வடலூர், நெய்வேலி ஆகிய பகுதிகளில் நாளை பிரசாரம் செய்ய துணை முதல்வர் உதயநிதியும் விண்ணப்பித்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கபபட்டுள்ளது. தவெக தரப்பில் முதலில் விண்ணப்பித்ததால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிலாக, உதயநிதி ஏப். 12 ஆம் தேதி கடலூரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Summary
Udhayanidhi Denied Permission in Cuddalore Due to Vijay Campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










