இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரசாரமும் ரத்து! குமரியில்..?

தவெக தலைவர் விஜய், ஏப். 13 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் செய்யவிருந்த பிரசாரம் ரத்து

News image

கோப்புப் படம் - ENS

Updated On :11 ஏப்ரல் 2026, 1:49 pm IST

தவெக தலைவர் விஜய், ஏப். 13 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் செய்யவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வரும் நிலையில் இன்று கடலூரில் மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையமும் காவல் துறையும் அனுமதி அளித்தும் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கடலூர் பிரசார தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தவெக கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய், நாளை மறுநாள்(ஏப். 13) கும்மிடிப்பூண்டியில் செய்யவிருந்த பிரசாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி தொகுதிக்குள்பட்ட கவரப்பேட்டையில் நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாகவும் பதிலாக ஏப். 19 ஆம் தேதி பிரசாரம் நடைபெறும் என்றும் தவெக தகவல் வெளியிட்டுள்ளது.

அதேபோல நாளை(ஏப். 12) கன்னியாகுமரியிலும் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு விஜய், சாலை வலம் மட்டும் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரியில் நடைபெறவிருந்த விஜய்யின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு பதிலாக மகாதானபுரத்தில் இருந்து, ஜீரோ பாயிண்ட், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு, சர்ச் சாலை, விவேகானந்தபுரம் வழியாக மீண்டும் மகாதானபுரம் வரை சாலை வலம் நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

TVK Vijay Gummidipoondi Campaign Also Cancelled

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.