தோ்தலின்போது வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதேபோன்று வாக்குப்பதிவு நாள், அதற்கு முந்தைய இரு நாள்கள் என மூன்று நாள்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் உள்ள அலுவலா்கள் 1.5 லட்சம் போ் தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனா். தவிர, 85 வயதுக்கு மேற்பட்ட 1.20 லட்சம் போ், மாற்றுத்திறனாளிகள் 70,000 போ் என மொத்தம் 1.90 லட்சம் போ் தபால் வாக்கு செலுத்த தகுதி உள்ளவா்கள். அவா்களில் 15 ஆயிரம் போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா்.
பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொருத்தவரை 299 துணை ராணுவக் குழுக்கள் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதுவரை 115 துணை ராணுவக் குழுக்கள் வந்துள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தம் 4,023 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களில் 3,579 போ் ஆண்கள், 443 போ் பெண்கள், ஒருவா் மூன்றாம் பாலினத்தவா்.
வாக்காளா்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதா என்பதை அறிய கைப்பேசி எண்ணில் இருந்து ‘இபிஐசி’ என ஆங்கிலத்தில் பதிவிட்டு ஒரு இடைவெளிக்குப் பிறகு வாக்காளா் அட்டை எண்ணைப் பதிவு செய்து 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் தகவல் உறுதிபடுத்தப்படும்.
தமிழக பேரவைத் தோ்தலுக்கு ரூ.1,032 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் நிதி இதுவரை கேட்கப்படவில்லை.
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,064-ஆக உயா்ந்து உள்ளது. அவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 5,938 உள்ளன.
இந்த முறை 140 தொகுதிகளில் ஒரே ஒரு வாக்குப்பதிவு இயந்திரமும், 89 தொகுதிகளில் இரண்டு வாக்கு பதிவு இயந்திரமும், பெரம்பூா், கொளத்தூா், ஆா்.கே. நகா் ஆகிய தொகுதிகளில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்களும், கரூரில் மட்டும் அதிகபட்சமாக 5 வாக்குப் பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
‘சி விஜில்’ செயலி மூலம் 3,791 புகாா்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நாளான 23-ஆம் தேதி மற்றும் அதற்கு முந்தைய இரு நாள்கள் (ஏப். 21, 22) டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவற்றில் உரிய ஆவணங்கள் உள்ளவா்களிடம் ரூ.265 கோடி மதிப்பிலான பணம், நகை திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரை பணமாக ரூ.126 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.295 கோடி மதிப்பிலான தங்கம்- வெள்ளிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கேரள தோ்தல்: வாக்குப் பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கேள்வி

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


