பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; 2 நாள் முழுமூச்சாக உழைக்க வேண்டும்! முகவர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை...

News image

முதல்வர் ஸ்டாலின் - படம்: எக்ஸ்.

Updated On :20 ஏப்ரல் 2026, 10:25 am

தேர்தலையொட்டி 2 நாள்களுக்கு முழுமூச்சாக உழைக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றுமாறும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

வருகிற ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், நவீன தொழில் நுட்பம் மூலம் 75,000 வாக்குச்சாவடி முகவர்களுடன் ஒரே நேரத்தில் உரையாடினார். அப்போது முகவர்களுக்கு அவர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதுபற்றி திமுக வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை  உறுதி செய்யும் வகையில், இன்று கழக வாக்குச்சாவடி முகவர்களுடன் ( BLA) முதல்வர் உரையாடி ஆலோசனைகளை வழங்கினார். 

கால் பிரிட்ஜிங் (Call Bridging) நவீனத் தொழில் நுட்ப முறையில் ஒரே நேரத்தில் 75,000 முகவர்களுடனும் அலைபேசி வாயிலாக நேரடியாகப் பேசிய முதல்வர்,  திராவிட மாடல் 2.O ஆட்சி அமைத்திட இந்த இரண்டு நாlகள் முழு மூச்சுடன் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றும்படி கூறினார்.

மேலும் பேசுகையில் “மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் ‘கருப்புச் சட்டமான – தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வந்து தமிழ்நாட்டின் குரலை முடக்கி, நம் மக்களை நம் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக்க முயன்ற சதியை நாம் போராடி வென்றோம். ஆனால் அவர்கள் இதோடு நிறுத்த மாட்டார்கள். நாம் பெற்ற வெற்றி வெறும் டிரெய்லர்தான். இன்னும் பல போர்கள் நமக்கு முன்னால் இருக்கின்றன. மக்களுக்கு இதைத் தொடர்ந்து உணர்த்த வேண்டும். நாம் கட்டியெழுப்பிய – இடஒதுக்கீடு, தமிழர் உரிமைகள், பெண்களின் உயர்வு, சிறுபான்மையினரின் கண்ணியம் – என எல்லாவற்றையும் பின்னோக்கி இழுக்கத் துடிக்கின்ற அவர்களுக்கு எதிராக நாம் வலிமையோடு போராட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு பலவீனமான ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்போதுதான் நம் மாநிலத்தைப் பலவீனப்படுத்தி, தில்லியிலிருந்து நம்மை ஆட்டிப்படைக்க முடியும் என திட்டம் தீட்டுகின்றனர். அந்தச் சதித் திட்டத்தை வீழ்த்த நம்மால்தான் முடியும்.  நம் கூட்டணியால்தான் தமிழ்நாட்டைத் தகர்க்க வரும் தில்லி அணியைத் தடுத்து நிறுத்த முடியும். சட்டமன்றத்தில் நாம் வலுவாக இருக்கும் வரை தில்லியால் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தொட முடியாது” என உறுதிபடத் தெரிவித்தார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் இந்த இரண்டு நாள்கள் அவரவர் வாக்குச்சாவடிக்கு உள்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ஒருமுறை நேரில் சென்று ஆதரவு கேட்க வேண்டும் என்றும் வாக்குப்பதிவு நாளில் திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் ஒன்றுகூட விடுபட்டு விடக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.

வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி முகவர்கள் செய்ய வேண்டிய முக்கிய ஏற்பாடுகளைப் பற்றி விளக்கியவர் “ தன்னார்வலர்த் தொண்டர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வாகன வசதிகள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவரவர்  பகுதியில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து வாக்களிக்கும் வகையில் அவர்களை நேரில் சென்று அழைத்து வர ஏற்பாடுகள் செய்வது அந்தந்தந்த வாக்குச்சாவடி முகவர்களது பொறுப்பு. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் விழிப்போடு இருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம். எந்த வித விதி மீறலோ, முறைகேடோ நடந்தால் உடனடியாக வார் ரூம் எண்ணிற்கு (08069446900) அழைத்து புகார் அளிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.

மேலும் “வாக்குப்பதிவு நாளில், வாக்குப்பதிவு தொடங்கி கடைசி வாக்கு பதிவாகும் வரை வாக்குச்சாவடியிலேயே வாக்குச்சாவடி முகவர்கள் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு, பதிவான வாக்குகளை உறுதிப்படுத்தி, வார் ரூம்க்கு தகவலைத் தெரிவித்து , படிவம் 17-யை சேகரித்த பிறகுதான் ஒவ்வொருவரும் ஓய்வெடுக்க வேண்டும்” என கண்டிப்புடன் கூறினார்.

முடிவுகள் வரும்போது ஒவ்வொரு தொகுதியாக – வாக்குச்சாவடி வாரியாக நாம் பெற்ற வாக்குகளை அலசி ஆராய்வேன். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்த வாக்குச்சாவடி முகவரை நானே நேரில் சந்திப்பேன் எனவும்தெரிவித்தார். 

ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களால் மக்கள் மத்தியில் நமக்கான ஆதரவு அலையே வீசுகிறது. நமது சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கை அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. மக்கள் மனநிலையும் , களநிலையும் நம் வெற்றியை உறுதி செய்கின்றன.

தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு அடுத்தமாதம் திராவிட மாடல் 2.O ஆட்சி அமைப்பது உறுதி என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Every Vote Counts; Work Tirelessly for Two Days:M.K. Stalin Instructs BLA 2 Agents

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.