உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு

கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு பற்றி...

10,000 cusecs of water released from the Kabini dam

கபினி அணை

Published On :

கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கபினியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கபினி அணை தற்போது நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு 15,500 கனஅடியாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி கபினியில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் சனிக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளது.

நீர் திறப்பை அடுத்து கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மைசூரு மாவட்டத்தின் டி.நரசிபுரா வட்டத்தில் கபினி ஆற்றுக்கு இடையே கபினி அணை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

10,000 cusecs of water per second has been released from the Kabini dam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.