/

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்! விடியோ வைரல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தமிழக முதல்வர் விஜய் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்த விடியோ வைரலாகி வருவது பற்றி...

News image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழக முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 7:38 pm IST

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர் விஜய் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் விழா இன்று (ஆகஸ்ட் 4) சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பல தலைவர்களும் முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாக முதல்வர் ரங்கசாமி காரில் சென்று கொண்டிருந்தபோது, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் விஜய், ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது முதல்வர் ரங்கசாமியும் நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறதா, எல்லாம் நல்லபடியாக நடக்கும், வாழ்த்துகள்” என்று கூறினார்.

அதற்குத் தமிழக முதல்வர் விஜய், “எல்லாம் நல்லபடியாக செல்கிறது வாழ்த்துகள். நன்றி” என தெரிவித்தார். இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Summary

A video of Tamil Nadu Chief Minister Vijay extending birthday wishes to Puducherry Chief Minister Rangasamy over the phone is going viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.