வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை பொழிந்துள்ளதாக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சரை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று (ஆக. 6) சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் வாசித்தார்.
உரையைத் தொடங்குவதற்கு முன்னதாக, முதல்வர் விஜய் மற்றும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஆர். வினோத், “உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி ஊழல் ஒவ்வொன்றையும் களை எடுத்து சமத்துவம் எனும் செடி வளர்த்து மக்களாட்சி எனும் பெரும் மரத்தை பிடித்து நிற்கும் கோட் சூட் போட்ட விவசாயி” என முதல்வர் விஜய்யைப் புகழ்ந்து பேசியபோது, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியில் திடீரென குறுக்கிட்ட பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், வேளாண் நிதிநிலை அறிக்கையில் உள்ளவற்றை மட்டும் படியுங்கள் என்று கூற, அவர் அறிக்கையில் இருப்பதையும் ம்ட்டும் வாசித்தார்.
சுமார் 130 நிமிடங்கள் வாசித்த உரையின் முடிவிலும், முதல்வர் விஜய்யைப் புகழ்ந்து பேசியதால் திமுகவினர் கோஷமிட்டு தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
பல்வேறு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், தவெக அரசின் வாக்குறுதிகளாக 100 சதவிகித பயிர்க்கடன் தள்ளுபடி, கரும்புக்கான ஆதார விலை ரூ. 4,500 ஆக உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இது எதிர்க்கட்சியினரிடம் கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026.
மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பதிவு.
குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வறà®à¯à®à®¿ பறà¯à®±à®¿ பà¯à®à®¾à®®à®²à¯, பà¯à®à®´à¯à®à¯à®à®¿ பாà®à®¿ à®®à¯à®¤à®²à®®à¯à®à¯à®à®°à®¿à®©à¯ à®à®à¯à®à®¿à®à¯à®³à®¿à®° பாராà®à¯à®à¯à®®à®´à¯ பà¯à®´à®¿à®¯à®ªà¯ பயனà¯à®ªà®à¯à®à®¤à¯à®¤à®¾à®©à¯ #TNAgriBudget2026.
— M.K.Stalin (@mkstalin) August 6, 2026
மறà¯à®±à¯à®®à¯à®°à¯ பà¯à®¯à®°à¯à®®à®¾à®±à¯à®± நிà®à®´à¯à®µà®¾à® à®®à®à¯à®à¯à®®à¯ நà®à®¨à¯à®¤à¯ à®®à¯à®à®¿à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯.#DravidianModel à®à®°à®à®¿à®©à¯ திà®à¯à®à®à¯à®à®³à®¿à®©à¯ à®®à¯à®²à¯ 'வà¯à®±à¯à®±à®¿' à®à®©à¯à®± லà¯à®ªà®¿à®³à¯ à®à®à¯à®à®¿à®©à®¾à®²à¯ வà¯à®²à¯ à®®à¯à®à®¿à®¨à¯à®¤à®¤à¯ à®à®©à¯à®±à¯ à®à®¨à¯à®¤ à®à®°à®à¯â¦ pic.twitter.com/YlD3WedXB3
Summary
DMK leader M.K. Stalin has criticized Chief Minister Vijay and a minister for showering praise on the Chief Minister to his great delight, instead of addressing the issue of drought.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி நீதிமன்ற உத்தரவு! மு.க. ஸ்டாலின் அறிக்கை!

பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

திராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!

தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக பதிலடி
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



