கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையின் உபரி நீர்வரத்து காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாள்களில் 2.52 அடி உயர்ந்துள்ளது.
கேரளம் மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணை நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 5 நாள்களாக உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு செவ்வாய்க்கிழமை முதல் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,119 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் செவ்வாய்க்கிழமை காலை 73.02 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 75.64 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2 நாள்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.52 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது அணையின் நீர் இருப்பு 31.74 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Summary
Regarding the rise in the Mettur Dam's water level by 2.52 feet over two days...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கபினி உபரிநீர் வரத்து! மேட்டூர் அணை நீர்மட்டம் 2 அடி உயர்வு!

மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK




