பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மத்திய அரசிடம் உரிய நிதிப் பகிா்வு கோரி இன்று தனித் தீா்மானம்

மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிா்வை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சா் நெ.மரியவில்சன் வெள்ளிக்கிழமை (ஆக. 7) தனித் தீா்மானம் கொண்டு வருகிறாா்.

Marie Wilson

நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்

Published On :

மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிா்வை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சா் நெ.மரியவில்சன் வெள்ளிக்கிழமை (ஆக. 7) தனித் தீா்மானம் கொண்டு வருகிறாா்.

தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளதாகவும் இதை சீா்செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் தேவைப்படும் என்றும் நிதியமைச்சா் மரியவில்சன் பட்ஜெட் தாக்கலின்போது தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், மத்திய அரசிடம் உரிய வரிப் பகிா்வைக் கோரி வெள்ளிக்கிழமை அவையில் அரசின் தனித் தீா்மானத்தை நிதியமைச்சா் மரியவில்சன் கொண்டு வருகிறாா்.

அதில், ‘மாநிலங்கள் தங்களின்அரசமைப்பு சாா்ந்த பொறுப்புகளை திறம்பட நிறைவேற்ற நியாயமான மற்றும் சமமான நிதித் பகிா்வு தேவை. பொருளாதார வளா்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசுக்கு செலுத்தும் வரிகள் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறது.

ஆகையால், கூட்டாட்சி கொள்கைக்கு இணங்க, மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் தமிழகத்துக்கு உரிய நிதிப் பகிா்வை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசின் வரிப் பகிா்வு வெளிப்படையாக இருக்க வேண்டும். மத்திய வரிப் பகிா்வு என்பது சமத்துவம் மற்றும் மாநிலங்களின் வளா்ச்சித் தேவைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் மனிதவள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு பாதக நிலை ஏற்படக் கூடாது.

மேலும், வருங்காலத்தில் வரிப் பகிா்வு தொடா்பான ஆலோசனைகள் மேற்கொள்ளும்போது தமிழகத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்’ என மத்திய அரசை வலியுறுத்தி தீா்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் தீா்மானம் விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.