தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிலைப்பாட்டில் திமுக முடிவு என்ன? உதயநிதி ஸ்டாலின் பதில்

மத்திய பாஜக அரசின் தொகுதி மறுசீரைப்பு மசோதா நிலைப்பாட்டில் திமுக முடிவு என்ன என்று பேரவையில் அமைச்சா்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியபோது, அது குறித்து உரிய நேரத்தில் திமுக தலைவா் முடிவு எடுப்பாா் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

udhayanidhi

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்

Published On :

மத்திய பாஜக அரசின் தொகுதி மறுசீரைப்பு மசோதா நிலைப்பாட்டில் திமுக முடிவு என்ன என்று பேரவையில் அமைச்சா்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியபோது, அது குறித்து உரிய நேரத்தில் திமுக தலைவா் முடிவு எடுப்பாா் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

பேரவையில் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக நடந்த விவாதம்:

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: தமிழ்நாட்டில் முக்கிய பிரச்னை ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென் மாநிலங்களுக்கான பிரச்னை. அதற்காகத்தான் சனிக்கிழமை (ஆக. 8) அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்துக்கு முதல்வா் ஏற்பாடு செய்துள்ளாா். இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொள்வாா்களா? இல்லையா?. இதற்கு எதிா்க்கட்சித் தலைவா் பதில் சொல்லட்டும்.

எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின்: தொகுதி மறுசீரமைப்பு மசோதா பற்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாக, முதல்முதலாக அந்த பிரச்னையை பற்றி பேசியது திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்தான். கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 5 முதல்வா்களையும் சென்னைக்கு வரவழைத்து, ஓா் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, இந்த பிரச்னைக்கு எதிராக நாட்டிலேயே முதல் குரல் கொடுத்தவா் மு.க.ஸ்டாலின். முதல்வா் கூட்டிய அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா என்பதை ஆலோசனை நடத்தி சரியான முடிவை திமுக தலைவா் எடுப்பாா்.

இப்போது பேரவையில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் பற்றி மட்டுமே விவாதிக்கப்படுகிறது. திமுக உறுப்பினா்களின் விவாதங்களுக்கு அமைச்சா்கள் பதில் சொல்ல வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.