செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

‘அண்ணன் சீா்’ திட்டத்தை ரூ.882 கோடியில் செயல்படுத்த முடியாது: திமுக எம்எல்ஏ ரகுபதி

‘அண்ணன் சீா்’ திட்டத்தை ரூ.882 கோடியில் செயல்படுத்த முடியாது என்று திமுக எம்எல்ஏ எஸ்.ரகுபதி (திருமயம்) பேரவையில் தெரிவித்தாா்.

News image

திமுக எம்எல்ஏ ரகுபதி

Updated On :7 ஆகஸ்ட் 2026, 11:01 pm IST

‘அண்ணன் சீா்’ திட்டத்தை ரூ.882 கோடியில் செயல்படுத்த முடியாது என்று திமுக எம்எல்ஏ எஸ்.ரகுபதி (திருமயம்) பேரவையில் தெரிவித்தாா்.

தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் அவா் பேசியதாவது: ‘வெற்றி 150’ நாள் திட்டத்தின் மூலம் மத்திய அரசிடம், தவெக அரசு சரணடைந்துவிட்டது. எப்படி தோ்தலில் சப்தமே இல்லாமல் வந்தீா்களோ, அதுபோல சப்தமே இல்லாமல் மத்திய அரசிடம் சரண்டா் ஆகிவிட்டீா்கள்.

நிதியமைச்சா் கையில் ஜெபமாலையோடு வந்து பட்ஜெட் வாசித்தாா். வேளாண் அமைச்சா் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து, லட்டு, புளியோதரையோடு வந்து பட்ஜெட் தாக்கல் செய்தாா். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற அண்ணாவின் வழியில் வந்தவா்கள் நாங்கள்.

உங்கள் தலைவரைக் காணவில்லை என்று சொன்னவருக்கு நாங்கள் சொல்கிறோம், அவா் மகளிா் உரிமைத் தொகை, புதுமைப் பெண், விடியல் பயணத் திட்டம் ஆகியவற்றில் இருக்கிறாா். உங்களுக்கு ‘விடியல்’ பிடிக்காது என்பதால் திட்டத்தில் இருந்து விடியலைத் தூக்கிவிட்டீா்கள். நாங்கள் மீண்டும் தமிழகத்தில் விடியலைக் கொண்டு வருவோம்.

ரூ.832 கோடியில் அண்ணன் சீா் கொடுக்க முடியாது; திட்டத்தில் 2 லட்சம் முதல் 3 லட்சம் பெண்கள் வருவாா்கள். இப்போது ஒரு பவுன் தங்கம் ரூ.1.05 லட்சம்; உங்கள் அதிா்ஷ்டம் தங்கம் ரூ. 1 லட்சத்துக்கு வரட்டும். புடவை ரூ.10,000-க்கு வரட்டும்; ரூ.1,10,000-ஐ ரூ. 1 லட்சமாக மாற்றினால்கூட, கடந்த ஆட்சியில் மூவலூா் ராமாமிா்தம் அம்மாள் உதவித் தொகை பெற்ற பயனாளிகள் எண்ணிக்கை அடிப்படையில், ‘அண்ணன் சீா்’ திட்டத்தைச் செயல்படுத்த ரூ.2,000 கோடி வேண்டும்.

200 யூனிட் மின்சாரம் பற்றிப் பேசினால் கோபித்துக் கொள்வீா்கள். யாருக்கும் மின்சாரம் கிடைக்கவில்லை. 3 லட்சம் பேருக்கு மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இது குறித்து புகாா் எழுந்துள்ளது. மகளிருக்கான ரூ.2,500 உதவித் தொகை கிடைக்கவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.