புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம்: உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், அதைத் தொடா்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாட வேண்டும் என அறிவிப்பாணையில் வலியுறுத்தவில்லை என மத்திய அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Published On :

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், அதைத் தொடா்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என மத்திய அரசின் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. . தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாட வேண்டும் என வலியுறுத்தவில்லை என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடங்குவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை நீா்த்துப்போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுகிறது.

அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே தொடங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜன. 28-ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையில், மாநில பாடலைப் பாடி அரசு நிகழ்ச்சியைத் தொடங்க எந்தத் தடையும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது வெறும் சடங்கு அல்ல. அது தமிழா்களின் உணா்வு, கலாசாரம் மற்றும் அடையாளமாக உள்ளது.

எனவே, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிா்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாசார மோதலை தவிா்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிா்வாக அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பாணையை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல.

மேலும், மத்திய அரசு அறிவிப்பாணையில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரமும், அதைத் தொடா்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாட வேண்டும் என அறிவிப்பாணையில் வலியுறுத்தவில்லை எனத் தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.