‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

8 தமிழக நகரங்களில் "டவுன் ஹால்' கூட்டங்கள்: "இண்டி' கூட்டணி தமிழக எம்.பி.க்கள் தீர்மானம்

தமிழ்நாட்டின் 8 முக்கிய மாநகரங்களில் "டவுன் ஹால்' (மக்கள் சந்திப்பு) பாணியில் கூட்டங்களை நடத்துவதென தமிழகத்தைச் சேர்ந்த "இண்டி' கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2026, 5:11 am IST

எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கப்பட்டது குறித்து மக்களிடையே விளக்குவதற்காக தமிழ்நாட்டின் 8 முக்கிய மாநகரங்களில் "டவுன் ஹால்' (மக்கள் சந்திப்பு) பாணியில் கூட்டங்களை நடத்துவதென தமிழகத்தைச் சேர்ந்த "இண்டி' கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாக தில்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டட அறையில் தமிழகத்தைச் சேர்ந்த இண்டி கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாணிக்கம் தாகூர், கார்த்தி ப.சிதம்பரம், விஜய் வசந்த், கே.கோபிநாத், பிரவீண் சக்கரவர்த்தி, ராபர்ட் புரூஸ், ஆர்.சுதா, கிறிஸ்டோபர் மாணிக்கம் (காங்கிரஸ்), சச்சிதானந்தம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), கே. சுப்பராயன், வி. செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்ட்), து.ரவிகுமார் (விசிக), துரை வைகோ (மதிமுக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட தகவலின்படி, தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்ட முக்கிய சட்ட மசோதாக்கள், மக்கள் சார்ந்த பிரச்னைகள் மற்றும் மாநில உரிமை சார்ந்த விவகாரங்கள் குறித்தும், எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு மதிப்பளிக்காமல் அவை நடவடிக்கைகள் எவ்வாறு முடக்கப்பட்டது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விளக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தமிழ்நாட்டின் 8 முக்கிய மாநகரங்களில் தலா 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு நேரடியாகச் சென்று "டவுன் ஹால்' பாணியில் மக்கள் சந்திப்பு மற்றும் விளக்கக் கூட்டங்களை நடத்த எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்தப் பணிகளை காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய் வசந்த் மற்றும் கிறிஸ்டோபர் மாணிக்கம் ஒருங்கிணைப்பார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தினமணியிடம் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த கூட்டத்தில் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள "சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குபடுத்துதல்) திருத்த மசோதா 2026' மாநிலங்களின் வரி மற்றும் கட்டணம் விதிக்கும் அதிகாரத்தைப் பறிப்பதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை திருத்த மசோதா, தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் நாடாளுமன்றத்தில் "இண்டி' கூட்டணி உறுப்பினர்கள் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாகவே, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.