புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்!

அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன்...

பிரக்ஞானந்தா.

Published On :

அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

அமெரிக்காவில் 5 நாள்கள் நடைபெற்ற முதலாவது செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ் தொடரில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், நெதர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்காவைச் சேர்ந்த 5 வீரர்களும் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில் இந்தியா சார்பில் பங்கேற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அவருக்குப் போட்டியாக உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் ஜவோகிர் சிந்தரோவ்வும் கடுமையான சவால் அளித்தார்.

பிரக்ஞானந்தா 23 புள்ளிகளுடனும், ஜவோகிர் 21.5 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களில் பிடித்த நிலையில், இறுதிச்சுற்றில் இருவரும் மோதிக் கொண்டனர்.

பிரக்ஞானந்தா - ஜவோகிர் சிந்தரோவ்

பிரக்ஞானந்தா - ஜவோகிர் சிந்தரோவ்

இருவரும் சமபலத்துடன் மோதியதால் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதன்மூலம், ஒரு சுற்று எஞ்சியிருந்த போதே, மொத்தம் 35 புள்ளிகளில் 23.5 புள்ளிகளைப் பெற்றார் பிரக்ஞானந்தா.

சிந்தரோவ்வைவிட 1.5 புள்ளிகள் முன்னிலை பெற்று முதல் செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை பிரக்ஞானந்தா தனதாக்கினார்.

சிந்தரோவ் 22 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தையும், அமெரிக்காவின் வெஸ்லி சோ 20.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். நடப்பாண்டின் தொடக்கத்தில் நார்வே செஸ்ஸில் சாம்பியன் பட்டத்தை வென்ற, பிரக்ஞானந்தாவுக்கு மற்றொரு மைல்கல் சாதனையாக இது அமைந்திருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தாவுக்கு 50,000 அமெரிக்க டாலர்களும் 13 கிராண்ட் செஸ் புள்ளிகளும் கிடைத்தது. மேலும், சின்க்ஃபீல்ட் கோப்பைக்கு முன்னதாக பிரக்ஞானந்தா கிராண்ட் செஸ் டூர் தரவரிசையில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இறுதிப்பட்டியல்

  • பிரக்ஞானந்தா (இந்தியா) -23.5 புள்ளிகள்

  • ஜவோகிர் சிந்தரோவ் (உஸ்பெகிஸ்தான்) -22 புள்ளிகள்

  • வெஸ்லி சோ (அமெரிக்கா) -20.5 புள்ளிகள்

  • லெவோன் அரோனியன் (அமெரிக்கா) -19 புள்ளிகள்

  • ஃபேபியானோ கரூவானா (அமெரிக்கா) - 17 புள்ளிகள்

  • லெனியர் டொமிங்குஸ் பெரெஸ் (அமெரிக்கா) -17 புள்ளிகள்

  • ஜோர்டன் வான் ஃபாரஸ்ட் (நெதர்லாந்து) -17 புள்ளிகள்

  • அனிஷ் கிரி (நெதர்லாந்து) -15.5 புள்ளிகள்

  • வின்சென்ட் கீமர் (ஜெர்மனி) -14.5 புள்ளிகள்

  • அவொண்டர் லியாங் (அமெரிக்கா) -14 புள்ளிகள்

Summary

Praggnanandhaa added another landmark to his stellar 2026 season by winning his maiden St. Louis Rapid & Blitz title. The Indian Grandmaster sealed the crown with a round to spare, strengthening his push for the Grand Chess Tour Finals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.