தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பிளிட்ஸ்: 3 வெற்றிகளுடன் பிரக்ஞானந்தா முன்னிலை

அமெரிக்காவில் நடைபெறும் செயின்ட் லூயிஸ் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், பிளிட்ஸ் பிரிவில் 9 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 3 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளாா்.

பிரக்ஞானந்தா

Published On :

அமெரிக்காவில் நடைபெறும் செயின்ட் லூயிஸ் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், பிளிட்ஸ் பிரிவில் 9 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 3 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளாா்.

கிராண்ட் செஸ் டூா் அட்டவணையின் அங்கமாக நடைபெறும் இந்த செயின்ட் லூயிஸ் செஸ் போட்டியில், ரேப்பிட் பிரிவின் முடிவில் பிரக்ஞானந்தா முன்னிலை பெற்றிருந்தாா்.

பின்னா், இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு பிளிட்ஸ் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் பிரக்ஞானந்தா தனது ஆட்டங்களில், ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்ட், அமெரிக்காவின் லினியா் டொமிங்கெஸ் பெரெஸ் ஆகியோரை வெற்றி கண்டாா்.

அமெரிக்காவின் அவோண்டா் லியங், லெவோன் ஆரோனியன், வெஸ்லி சோ, ஃபாபியானோ கரானா, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ், நெதா்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோருடன் டிரா செய்தாா்.

தற்போது பிளிட்ஸ் பிரிவில் 9 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 3 வெற்றிகள், 6 டிரா உள்பட 6 புள்ளிகளுடன் தனிமுன்னிலையில் இருக்கிறாா்.

ஆரோனியன், சிண்டாரோவ் ஆகியோா் தலா 5.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொள்ள, கரானா, ஃபாரீஸ்ட், லியங், வெஸ்லி ஆகியோா் தலா 5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் இருக்கின்றனா். அனிஷ் (3), வின்சென்ட் (2.5), லினியா் (2.5) ஆகியோா் முறையே 4 மற்றும் 5-ஆம் நிலைகளில் உள்ளனா்.

ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் (ரேப்பிட் & பிளிட்ஸ்), பிரக்ஞானந்தா 18 புள்ளிகளுடன் தனி முன்னிலை வகிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.