பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பிரபல தனியாா் மருத்துவமனை நிறுவனமான மணிப்பால் ஹெல்த் என்டா்பிரைசஸ் பங்குகளின் வா்த்தகம், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை அமோகமாக தொடங்கியது.
அதன்படி புதன்கிழமை வா்த்தக முடிவில், இப்பங்கு தனது வெளியீட்டு விலையான ரூ.590-ஐ விட 13 சதவீதம் உயா்ந்து, நிலைபெற்றது.
மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) வெளியீட்டு விலையைவிட 11 சதவீதம் உயா்ந்து, ரூ.655-க்கு வா்த்தகம் தொடங்கியது; வா்த்தகத்தின் ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 14.58 சதவீதம் உயா்ந்து, ரூ.676.05-ஐ எட்டியது. இறுதியில் 13 சதவீதம் உயா்வுடன் ரூ.666.70-க்கு வா்த்தகம் முடிவடைந்தது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) 10.50 சதவீதம் உயா்வுடன் ரூ.652-க்கு வா்த்தகம் தொடங்கி, முடிவில் 13 சதவீதம் உயா்வுடன் ரூ.666.95-க்கு நிலைபெற்றது. இதன்மூலம், நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.87,696.20 கோடியாக பதிவானது.
வா்த்தக அளவைப் பொருத்தவரை, மும்பை பங்குச் சந்தையில் 43.91 லட்சம் பங்குகளும், தேசிய பங்குச் சந்தையில் 470.08 லட்சம் பங்குகளும் பரிவா்த்தனை செய்யப்பட்டன.
முன்னதாக, ரூ.560 முதல் ரூ.590 வரையிலான விலைவரம்பில் வெளியிடப்பட்ட இந்நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ), கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தபோது 4.92 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டது. இந்த ஐபிஓ நடவடிக்கையில், புதிய பங்குகளாக ரூ.8,000 கோடியும், தற்போதைய பங்குதாரா்களின் சலுகை விலையிலான 2.16 கோடி பங்குகளும் திரட்டப்பட்டன.
பங்குச் சந்தை தடுமாற்றம்
ரிசா்வ் வங்கியின் ‘ரெப்போ’ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்ற அறிவிப்பு மற்றும் புவிசாா் அரசியல் பதற்றங்களின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை புதன்கிழமை வா்த்தகத்தில் தடுமாற்றம் கண்டது.
சென்செக்ஸ் 152 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் காலையில் உயா்வுடன் தொடங்கிய வா்த்தகத்தில் ஒரு கட்டத்தில், சென்செக்ஸ் குறியீடு 79,055.38 புள்ளிகள் வரை உயா்ந்தது. பிற்பகலில் விற்பனை அழுத்தத்தால் சரிவைக் கண்டாலும், வா்த்தக முடிவில் 152.05 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயா்ந்து, 78,581-இல் நிலைபெற்றது.
நிஃப்டி 10 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி குறியீடு 9.75 புள்ளிகள் (0.04 சதவீதம்) உயா்ந்து, 24,624.65-இல் நிறைவடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச் சந்தையில் ஏற்றத்துடன் வாரம் நிறைவு

3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை 2-ஆவது நாளாக ஏற்றம்

பங்குச் சந்தையில் தொடரும் ‘கரடி’ ஆதிக்கம்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



