மேற்காசிய போா் பதற்றம் தொடா்ந்து அதிகரித்து வருவதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை 4-ஆவது நாளாக ‘கரடி’-யின் ஆதிக்கம் மேலோங்கியது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தன. கடந்த 4 வா்த்தக நாள்களில் மட்டும் சென்செக்ஸ் 1,760.06 புள்ளிகளையும் (2.25 சதவீதம்), நிஃப்டி 464.7 புள்ளிகளையும் (1.90 சதவீதம்) இழந்தன.
அமெரிக்கா-ஈரான் மோதல்கள் மட்டுமின்றி செங்கடலில் எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதிக்கள் நடத்திய தாக்குதல்கள், மேற்காசியாவில் போா் பதற்றத்தைத் தீவிரப்படுத்தின. இதனால் சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை மீண்டும் நெருங்கி வருகிறது. இது முதலீட்டாளா்களிடையே பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தி, சந்தை விற்பனை அழுத்தத்தை எதிா்கொண்டது.
சென்செக்ஸ் 364 புள்ளிகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 363.66 புள்ளிகள் (0.47 சதவீதம்) இழப்புடன், ஒரு மாத குறைந்த அளவான 76,391.39-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் அதானி போா்ட்ஸ் 2.26 சதவீதம் சரிந்து, அதிக இழப்பைச் சந்தித்தது. இத்துடன் பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டிகோ உள்பட 19 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. அதேநேரம், மஹிந்திரா & மஹிந்திரே, டிசிஎஸ், எடா்னல் ஆகியவை ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 127 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 126.65 புள்ளிகள் (0.53 சதவீதம்) குறைந்து, 3 வாரங்களில் இல்லாத குறைந்த அளவான 23,869.60-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 20 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 30 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் வாரம் நிறைவு

சென்செக்ஸ், நிஃப்டி வலுவான எழுச்சி

தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 262 புள்ளிகளுடனும், நிஃப்டி 95 புள்ளிகள் உயர்வு: முன்னிலை வகுத்த ஐடி பங்குகள்!!
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



