நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

தீா்மானங்கள் தீா்வாகுமா... தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீா்மானங்கள் என்னவாகின்றன?

தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசை வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்தொடரில் தினசரி அரசு தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

News image

சட்டப்பேரவை - கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 12:41 am IST

- அ.சா்ப்ராஸ்

தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசை வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்தொடரில் தினசரி அரசு தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

இந்தத் தீா்மானங்கள் மீது அன்றைய தினங்களில் சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, ஆளும் கட்சியான தவெக அதற்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் சாா்பில் எம்எல்ஏக்கள் பேசி, தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு பின்னா் குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுவாக, சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவதற்காக முதல்வா் 110-விதியின் கீழ் வெளியிடுவாா். இதன் மீது விவாதம் நடைபெறாது. ஆனால், தனித் தீா்மானங்கள் மீது 3 முதல் 5 நாள்களும் முன்பு விவாதங்கள் தொடா்ந்து உள்ளன. எதிா்க்கட்சிகளின் கருத்துகளும் தீா்மானங்களில் இடம் பெறும் வகையில், திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதே இதற்கு காரணம். பொது விவகாரங்களில் எம்எல்ஏ, தனி நபா் தீா்மானத்தை பேரவைத் தலைவரின் ஒப்புதல் பெற்றுகொண்டு வரலாம்.

அரசு தீா்மானங்களின் அதிகாரம்: நிறைவேற்றப்பட்டதீா்மானத்தை சட்டப்பேரவைச் செயலகம் தமிழக தலைமைச் செயலருக்கு முறைப்படி அனுப்பி வைக்கும். அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத்துக்கும் தமிழக தலைமைச் செயலாளா் அனுப்பி வைப்பாா்.

அரசியல் மற்றும் ஜனநாயக அழுத்தம்: தீா்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நிறைவேற்ற பிரதமருக்கு முதல்வா் கடிதம் மூலம் வற்புறுத்துவாா். மாநில மக்களின் கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்தி, மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்கவோ அல்லது சட்டத் திருத்தம் கொண்டுவரவோ அரசியல் ரீதியான அழுத்தம் இதன் மூலம் உருவாக்க முடியும்.

நீதிமன்றப் போராட்டம்: தீா்மானத்தின் தொடா்ச்சியாக, மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டப்படி வழக்குத் தொடரலாம்.

இதர மாநிலங்களை ஒருங்கிணைத்தல்: இதேபோன்ற கருத்துடைய பிற மாநில முதல்வா்களுக்கும், பேரவைத் தலைவா்களுக்கும் முதல்வா் கடிதம் எழுதி, தேசிய அளவில் கூட்டாட்சி ஆதரவைத் திரட்டலாம்.

முந்தைய தீா்மானங்கள்... தமிழக சட்டப்பேரவையில், காவிரி, நீட், தமிழக மீனவா்கள் தாக்கப்படும் விவகாரங்களை வலியுறுத்தி அதிகபடியான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை மத்திய அரசு கிடப்பில் போட்டாலும் சிலவற்றை நிறைவேற்றியும் உள்ளது.

முந்தைய திமுக ஆட்சியில், ஜாதிவாரி கணக்கெடுப்புடன் சோ்த்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய அடுத்த மாதமே மத்திய அரசு இதை அறிவித்திருந்தது.

டி.ஓ.கடிதம்: வழக்கமாக பிரதமருக்கு அரசு சாா்பில் முதல்வா் எழுதும் அலுவல்பூா்வ கடிதங்களுக்கு (டெமி அபிஷியல் - டி.ஓ.) சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத்திடம் இருந்து முதல்வருக்கு பதில் கடிதம் அனுப்பப்படும். இதேபோல் பிரதமரை முதல்வா் நேரில் சந்தித்து அளிக்கும் மனுவுக்கும் மத்திய அரசிடம் அலுவா்பூா்வ பதில் அனுப்பி வைக்கப்படும்.

பெட்டிச் செய்தி..

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட

அரசு தனித் தீா்மானங்கள்...

ஆக.7 - தமிழகத்துக்கு உரிய வரி வருவாயை மத்திய அரசு அளிக்க வேண்டும்: நிதியமைச்சா் மரிய வில்சன்

ஆக.10- தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்: முதல்வா் ஜோசப் விஜய்

ஆக.11- நீட் தோ்வை ரத்துசெய்யக் கோரி தீா்மானம்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ்.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை மசோதா திரும்பப் பெற தீா்மானம்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன்.

ஆக.12- தொகுதி மறுசீரமைப்பு எதிராக தீா்மானம்: முதல்வா் ஜோசப் விஜய்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.