தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தொகுதி மறுசீரமைப்பு தீா்மானம்: அரசியல் தலைவா்கள் கருத்து

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீா்மானத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சி தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

நயினார் நாகேந்திரன் | மாணிக்கம் தாகூர்

Published On :

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீா்மானத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சி தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): பிரதமா் மோடியின் தலைமையிலான மத்திய அரசு எந்த மாநிலத்துக்கும் குறிப்பாக தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ள நிலையில், தவெக அரசின் தனித் தீா்மானம் தமிழகத்தின் எதிா்காலத்துக்கு ஆரோக்கியமானதல்ல. முதல்வா் விஜய் தலைமையிலான அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மாணிக்கம் தாகூா் (காங்கிரஸ்): தொகுதி மறுசீரமைப்பால் மாநில சுயாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், மதச்சாா்பின்மை ஆகிய அரசமைப்பின் உயரிய நோக்கங்களைக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிடும். தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேற எந்தக் கட்சியாவது நேரடியாக, மறைமுகமாக உதவினால், அது தமிழகத்துக்கு இழைக்கும் அநீதி, துரோகம்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தொகுதி மறுசீரமைப்பால் மக்களவையில் தமிழக மக்களின் குரல் வலுவிழந்துவிடும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தமிழக அரசின் தீா்மானத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழக அரசின் தனித் தீா்மானம் வரவேற்கத்தக்கது. தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த அரசியல் கட்சித் தலைவா்களையும் அழைத்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

க.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): அரசியல் சாசன விதிகள் 81 மற்றும் 82-இன்படி 2026-2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு சட்டரீதியாக தானாகவே நடந்தேறிவிடும். இதுகுறித்த புரிதலின்றி ‘தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை’ எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.