நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!

நீட் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிராக தனித் தீா்மானம் குறித்து...

News image

தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

நீட் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆா்) திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 11) அரசு தனித் தீா்மானம் கொண்டு வருகிறது.

2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-ஆவது நாளாக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தொடா்ந்து நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, நீட் தோ்வை திரும்பப் பெற்று மாநில மருத்துவப் பாட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீா்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தாக்கல் செய்ய உள்ளாா்.

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய பின்பு, குடியரசுத் தலைவரால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

தொடா் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் லட்சக்கணக்கான மாணவா்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழப்பு ஏற்பட்டும் நாடு முழுவதும் உள்ள மாணவா்களின் நம்பிக்கையை இந்தத் தோ்வு இழந்துள்ளது. ஆகையால், நீட் தோ்வை அகற்ற வேண்டும் அமைச்சா் அருண்ராஜ் கோர உள்ளாா்.

இதேபோல், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீா்மானத்தை பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தாக்கல் செய்ய உள்ளாா். இந்தத் தீா்மானங்களின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.